2013-07-12 15:18:04

எகிப்தின் புதிய அரசியல் அமைப்பு இசுலாமியப் பண்புகளை அதிகமாகக் கொண்டுள்ளது, காப்டிக் ஆயர் அவாட்


ஜூலை,12,2013. எகிப்தில் கடந்த திங்களன்று அமலுக்கு வந்துள்ள சீரமைக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பு முந்தைய அரசியல் அமைப்பைவிட இன்னும் அதிகமான இசுலாமியப் பண்புகளைக் கொண்டிருப்பதாக அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர் ஒருவர் தனது அச்சத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாணையின் மூலம் இம்மாதம் 8ம் தேதி அமலுக்கு வந்துள்ள சீரமைக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பு குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த காப்டிக் கத்தோலிக்க ஆயர் Kamal Fahim Awad Hanna இவ்வாறு கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் உரிமைகளைச் சுட்டிக்காட்டும் பகுதி கடந்த ஆண்டின் அரசியல் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்றுரைத்த ஆயர் Kamal Fahim, எகிப்திலுள்ள கிறிஸ்தவர்களும் யூதர்களும் தங்களின் மதங்களைச் சார்ந்த விவகாரங்களை நடைமுறைப்படுத்தவும், தங்களின் ஆன்மீகத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் சமயக் கோட்பாடுகளே அவர்களுக்கு முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.