2013-07-10 15:47:41

எகிப்தில் அமைதியும் ஒப்புரவும் உருவாக மூன்று நாட்கள் செபம்


ஜூலை,10,2013. எகிப்தில் அமைதியும் ஒப்புரவும் உருவாகவேண்டும் என்ற முயற்சியில், இச்செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் செப நாட்களாக அமையவேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார், இங்கிலாந்து காப்டிக் ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறையின் தலைவர் ஆயர் Angaelos.
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இரமதான் மாதத்தின் துவக்கத்தையொட்டி, இந்த அழைப்பை விடுத்துள்ள ஆயர் Angaelos அவர்கள், அமைதியான முறையில் அந்நாட்டில் மாற்றங்களைக் கொணர விழையும் மக்கள் வன்முறைகளைச் சந்திப்பது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்று கூறினார்.
அரசுத் தலைவர் Morsi அவர்கள் தலைமைப் பதவியிலிருந்து விலகும்படி போராடிவரும் மக்களில், இத்திங்களன்று, 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 455 பேர் காயமுற்றுள்ளனர் என்றும் அரசுத் தகவல்கள் கூறுகின்றன.
உண்மையான அமைதியையும், முன்னேற்றத்தையும் விரும்பும் மக்கள் மீது வன்முறைகள் காட்டப்படுவது எவ்வகையிலும் நியாயமற்ற செயல் என்று ஆயர் Angaelos கூறியுள்ளார்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.