2013-07-08 17:24:35

Sahel பகுதியில் ஏறத்தாழ1 கோடியே 10 இலட்சம் மக்கள் பசியால் உயிரிழக்கும் அபாயம்


ஜூலை,08,2013. ஆப்ரிக்காவின் Sahel பகுதியில் ஏறத்தாழ1 கோடியே 10 இலட்சம் மக்கள் பசியால் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாகஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றையஉலகசமுதாயத்தின் பார்வை சிரியா அகதிகளை நோக்கித் திரும்பியுள்ளதால் Sahel பகுதியில் உணவின்றி துன்புறும் மக்களுக்கு போதியஉதவிகள் கிட்டுவதில்லை எனக் கூறும் ஐ.நா. அமைப்பு, 172 கோடி டாலர்கள் Sahel பகுதி மக்களுக்கெனதேவைப்படும் நிலையில், உதவிபுரியும் நாடுகளிடமிருந்து இதுவரை 60 கோடியே 70 இலட்சம் டாலர்களே கிட்டியுள்ளதாகஅறிவித்துள்ளது.
ஆப்ரிக்கக் கண்டத்தின் வடக்கில் உள்ளSahel பகுதியில் காம்பியா, செனகல், மௌரித்தானியா, மாலி, புர்கினா ஃபாசோ, அல்ஜீரியா, நைஜர், நைஜீரியா, கேம்ரூன், சாடு, சூடான், எரிட்ரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகள் வருகின்றன.

ஆதாரம் : catholic online








All the contents on this site are copyrighted ©.