2013-07-05 16:43:07

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நண்பரையும்விட மேலானவர்


ஜூலை,05,2013. இயேசு நண்பரையும்விட மேலானவர். அவர் உண்மை மற்றும் வாழ்வின் ஆசிரியர். மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் பாதையை நமக்கு அவர் காட்டுகின்றவர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தி, அவரின் ‏@Pontifex என்ற டுவிட்டர் பக்கத்தில் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்குத் திருமடல் இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டதை முன்னிட்டு @TerzaLoggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள திருப்பீடச் செயலகம், இன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்குத் திருமடல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு, Lumen Fidei அதாவது விசுவாச ஒளி எனப் பெயரிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.