ஜூலை,05,2013. ஜெர்மனியில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகப் புள்ளிவிபரங்கள்
கூறுகின்றன. அந்நாட்டில் சில ஆண்டுகளாக குறைந்த அளவு பிறப்பு விகிதம்தான் இருந்தது,
ஆனால் 2012ம் ஆண்டில் இந்த விகிதம் அதிகரித்துள்ளது என்று புள்ளி விபரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. கடந்த
2012ம் ஆண்டு 6,74,000 குழந்தைகள் ஜெர்மனியில் பிறந்துள்ளனர், இவ்வெண்ணிக்கை, 2011ம்
ஆண்டில் இருந்ததைவிட 1.6 விழுக்காடு அதிகம் என்றும் அப்புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தற்போதைய
பிறப்பு விகிதம் அதிகரிப்புக்கு, குடியேற்றதார மக்களின் எண்ணிக்கையே காரணம் என்றும் அந்நாட்டு
ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.