2013-07-02 14:45:18

மனிதரின் இயற்கையான இயல்பை புறக்கணிப்பது திருமணத்துக்கு கேடு விளைவிக்கும், கர்தினால் ரூயினி


ஜூலை,02,2013. ஓரினச்சேர்க்கைகளைத் “திருமணங்கள்” என அங்கீகரிப்பது, இயற்கையான நியதிகளைப் புறக்கணிப்பதாகும் மற்றும் இது இயற்கையான திருமணங்களுக்கு ஊறு விளைவிக்கின்றது என இத்தாலியக் கர்தினால் கமிலோ ரூயினி கருத்து தெரிவித்தார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு உச்சநீதிமன்றம் திருமணம் குறித்த விதிமுறையைப் பாதுகாக்கத் தவறியுள்ளது எனக் குறிப்பிட்ட கர்தினால் ரூயினி, நம் வாழ்வின் இருப்பின் அடிப்படை அமைப்பு முறைகளே திசை திருப்பப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
Il Foglio என்ற இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள, உரோம் மறைமாவட்ட முன்னாள் முதன்மைத் தலைவரான கர்தினால் ரூயினி, திருமணம் குறித்த அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு தந்தை, ஒரு தாய், குழந்தைகள் இல்லாத ஒரு குடும்பம் குறித்துப் பேசுகிறது என்று கூறியுள்ளார்.
ஒரே பாலினத் திருமணம், இயற்கையான திருமணத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால் இடம்பெறுவது, இது மனிதரின் இயற்கையான இயல்பை புறக்கணிப்பதாகவும் உள்ளது என்றும் கர்தினால் ரூயினி கூறினார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.