ஜூலை,01,2013. இளையோருக்குப் பல்வேறு கொடைகளை வழங்கும் இயேசுகிறிஸ்து, அதற்குக் கைமாறாக,
அவ்விளையோர் தன் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்பதை மட்டுமே கேட்கிறார் என லித்வேனியாவில்
ஆறாவது இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் லித்வேனியாவின்
Kaunas எனுமிடத்தில் கூடியிருந்த இளையோருக்குச் செய்தி அனுப்பியத் திருத்தந்தை, இளையோரின்
நண்பராக, சகோதரராக, உண்மை மற்றும் வாழ்வின் குருவாக இருக்க விரும்பும் இயேசு, இறைவனின்
அன்பை, இரக்கத்தை கொடையாக வழங்குகிறார் என்றார். நம்முடைய குறைகளுடன், பலவீனங்களுடன்
அவர் நம்மை அன்புகூர்கிறார், எனெனில், அவ்வாறு அன்புகூரப்படும்போது நாம் புதுப்பிக்கப்படுகிறோம்
எனவும் கூறினார் திருத்தந்தை. கிறிஸ்துவோடு நட்பு கொள்வது, மற்றும், இறை அன்பைப்
பெறுவது என்பது, திருவருட்சாதனங்கள் வழி, குறிப்பாகதிருநற்கருணை மற்றும் ஒப்புரவு அருட்சாதனங்கள்
வழி என்றதிருத்தந்தை, இயேசுவின் வார்த்தைக்குச் செவிமடுப்பது இன்னுமோரு வழி எனவும் தெரிவித்தார்.
இயேசுவின் நட்பு என்பது ஒரு மாயத்தோற்றம் அல்ல, அது அனைவருக்கும் உரிய ஓர் உறுதியானஉண்மை
என்பதை சிலுவையில் இயேசு வெளிப்படுத்தினார் எனலித்வேனிய இளைஞர்களுக்கு அனுப்பியுள்ளசெய்தியில்
கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.