2013-06-28 15:55:41

திருத்தந்தை பிரான்சிஸ், Knights of Columbus தலைவர் சந்திப்பு


ஜூன்,28,2013. Knights of Columbus என்ற அனைத்துலக கத்தோலிக்கப் பக்த அமைப்பின் தலைவர் Carl Anderson அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், Knights of Columbus அமைப்பின் 2012ம் ஆண்டின் நடவடிக்கைகள் குறித்து இவ்வாரத்தில் ஆண்டறிக்கை வெளியிட்ட Anderson, இந்த அமைப்பு பிறரன்பைச் செயல்படுத்துவதே எப்பொழுதும் தனது முதல் கொள்கையாகக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
Knights of Columbus அமைப்பு, தனது இந்த 131 ஆண்டுகால வரலாற்றில், எப்போதையும்விட 2012ம் ஆண்டில் அதிகமான அளவில் நன்கொடைகளை வழங்கி, அதிகமான நேரங்கள் தன்னார்வப் பணிகளிலும் ஈடுபட்டது எனவும் தெரிவித்தார் Carl Anderson.
2012ம் ஆண்டில் 16 கோடியே 75 இலட்சம் டாலருக்கு அதிகமான நன்கொடைகளை வழங்கியுள்ள Knights of Columbus அமைப்பு 7 கோடிக்கு அதிகமான மணிநேரங்களைப் பிறரன்புப் பணிகளில் செலவிட்டுள்ளது என்றும் அறிவித்தார் Anderson.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.