2013-06-28 16:13:05

இலங்கையில் அப்பாவி மக்கள் காவல்துறையின் சித்ரவதைகளுக்கு உள்ளாகின்றனர்


ஜூன்,28,2013. இலங்கையில் சந்தேகத்தின்பேரில் அப்பாவி மக்கள் விசாரிக்கப்படும்போது அவர்கள் காவல்துறையின் சித்ரவதைகளுக்கு பரவலாக உள்ளாகின்றனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து காவல்நிலையங்களில் சித்ரவதைகள் வழக்கமாக நடக்கும் செயல்களாக இருந்து வருகிறது என்றும், சித்ரவதைகளால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் தாங்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து புகார் அளிப்பதற்குத் தற்போது துணிச்சலைக் கொண்டுள்ளனர் என்றும் ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
கடந்த 18 ஆண்டுகளில் 1,500க்கும் மேற்பட்ட சித்ரவதை சார்ந்த புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆயினும் இதுவரை 5 புகார்களில் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன என மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.