2013-06-27 16:42:49

திருமண உறவுக்கும், அமெரிக்க நாட்டுக்கும் இது ஒரு கருப்பு நாள் - கர்தினால் Dolan


ஜூன்,27,2013. திருமண உறவுக்கும், அமெரிக்க நாட்டுக்கும் இது ஒரு கருப்பு நாள் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Timothy Dolan கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் இதுவரை நிலவிவந்த திருமண உறவின் பாதுகாப்பு என்ற சட்டத்தின் ஒரு சில பகுதிகளை இரத்து செய்வதாக அமெரிக்க உச்சநீதி மன்றம் இப்புதனன்று அறிவித்துள்ளது.
உச்ச நீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை ஆதரித்தும், நால்வர் இதனை எதிர்த்தும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவு என்ற உண்மையை உச்ச நீதி மன்றம் உணராமல் போனது, நாட்டுக்கு ஒரு பெரும் பின்னடைவு என்று கர்தினால் Dolan அவர்களும், சான் பிரான்சிஸ்கோ பேராயர் Salvatore Cordileone அவர்களும் கூறியுள்ளனர்.
இத்தகையத் தீர்ப்பு வருங்காலக் குழந்தைகளுக்கு பெரும் அநீதியான ஒரு தீர்ப்பு என்றும், கடவுளின் படைப்பையும், குடும்பம் என்ற அடிப்படை உண்மையையும் கேள்விக்குறியாக மாற்றியுள்ள இத்தீர்ப்பினால் வருங்காலம் பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் அமெரிக்க ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.