2013-06-25 15:26:09

கற்றனைத் தூறும் ஜூன் 26, உலக நாட்கள் இரண்டு


ஜூன் 26, இப்புதனன்று இரு உலக நாட்கள் கடைபிடிக்கப்படுகின்றன.


19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், பிரித்தானிய வர்த்தகர்கள் 'Opium' எனப்படும் போதைப்பொருளை சீனாவுக்குள் மறைமுகமாகப் புகுத்திவிட்டனர். இந்த வர்த்தகத்தையும், நாட்டில் உள்ள போதைப் பொருட்களையும் அழிப்பதற்கு, சீன அரசவை அதிகாரி Lin Zexu என்பவர் Guangdong பகுதிக்கு அனுப்பப்பட்டார். இவ்வதிகாரி, 500 பணியாளர்களின் உதவி கொண்டு, 1839ம் ஆண்டு, ஜூன் மாதம் 3ம் தேதி முதல், 26ம் தேதி முடிய, Guangdong பகுதியில், 12 இலட்சம் கிலோகிராமுக்கு அதிகமாக இருந்த 'Opium' போதைப்பொருளை முற்றிலும் அழித்தார். இந்த உன்னத செயல்பாட்டின் நினைவாக, 1988ம் ஆண்டு முதல் ஜூன் 26ம் தேதி, 'போதைப்பொருள் வர்த்தகத்தையும், பயன்பாட்டையும் எதிர்க்கும் உலக நாள்' என கடைபிடிக்கப்படுகிறது.

1945ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒப்பந்தமொன்று ஐ.நா.பொது அவையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1987ம் ஆண்டு, மீண்டும் ஜூன் 26ம் தேதி, சித்ரவதைகளுக்கு எதிராக இயற்றப்பட்ட மற்றொரு ஒப்பந்தமும் ஐ.நா. அவையில் கையெழுத்திடப்பட்டது. இவ்விரு நாட்களின் நினைவாக, 1998ம் ஆண்டு முதல், ஜூன் 26ம் தேதி, 'சித்ரவதைகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் உலக நாள்' என கடைபிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : Wikipedia








All the contents on this site are copyrighted ©.