2013-06-22 16:30:07

சிரியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது கைவிடப்பட வேண்டும், அமெரிக்க ஆயர்கள்


ஜூன்,22,2013. சிரியாவில் போரிடும் தரப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்குவதைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிரியாவில் போரிடும் புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஒபாமா நிர்வாகம் அறிவித்த சில நாள்களுக்குப் பின்னர், அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுத் தலைவர் ஆயர் Richard Pates, அமெரிக்க ஆயர்களின் CRS பிறரன்பு அமைப்பின் தலைவர் ஆயர் Gerald Kicanas ஆகிய இருவரும் இணைந்து இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
இவ்விரு ஆயர்களும் இணைந்து அமெரிக்க ஐக்கிய நாட்டுச் செயலர் John Kerryக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிரியாவுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவது வன்முறையை அதிகரித்து, அந்நாட்டு மக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சிரியாவில் 93 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் என்று ஐ.நா. கூறுகிறது.

ஆதாரம் : CWN








All the contents on this site are copyrighted ©.