2013-06-21 16:30:21

மியான்மார் ஆயர்கள் : கல்வி, கூட்டமைப்பு, பல்சமய நல்லிணக்கம் அவசியம்


ஜூன்,21,2013. மியான்மாரில் சுதந்திரம், சகோதரத்துவம், சனநாயகம் ஆகியவற்றை வளர்ப்பதற்கு அந்நாடு சில பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
பூர்வீக இனத்தவரின் நிலைமைகளை மேம்படுத்துதல், சிறுபான்மை இனங்களோடு நடத்தும் சண்டையை நிறுத்துதல், பல்சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், அகதிகள் விவகாரத்துக்குத் தீர்வு காணுதல் போன்ற சில சவால்களை மியான்மார் அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் ஆண்டுக் கூட்டத்தை முடித்துள்ள ஆயர்கள் Fides செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மியான்மாரின் வளர்ச்சிக்குத் தேவையான சில கூறுகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அனைவரும் நன்றாக வாழ்வதற்கு வாய்ப்புக்களை வழங்கும் பொன்னிலமாக மியான்மார் மாறுகின்ற புதிய சகாப்தம் மலரும் என்ற தங்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ள ஆயர்கள், நாட்டின் வளர்ச்சியிலும், மக்களின் நல்வாழ்விலும் திருஅவை ஊக்குமுடன் பணி செய்யும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.