2013-06-21 16:15:30

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் ”சமய சுதந்திரத்துக்கான 15 நாள்கள்”


ஜூன்,21,2013. மறைசாட்சிகளான புனிதர்கள் தாமஸ் மூர், ஜான் ஃபிஷெர் ஆகியோரின் விழாக்களின் திருவிழிப்புத் தினமாகிய இவ்வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், “சமய சுதந்திரத்துக்கான 15 நாள்கள்” என்ற ஒரு நிகழ்வைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிகழ்வு குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சமய சுதந்திரப் பணிக்குழுத் தலைவரான பால்டிமோர் பேராயர் வில்லியம் லோரி, அனைத்து மக்களையும் பாதிக்கின்ற சமய சுதந்திரம் என்ற விவகாரத்துக்கு கத்தோலிக்கரின் பங்கை ஆயர்களின் இம்முயற்சி எடுத்துக் காட்டுகின்றது என்று கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகமனைத்தின் சனநாயகத்துக்கு சமய சுதந்திரம் முக்கியமானது என்றும் பேராயர் லோரி கூறினார்.
“சமய சுதந்திரத்துக்கான 15 நாள்கள்” என்ற இந்த நிகழ்வின் தொடக்கமாக, பால்டிமோரின் விண்ணேற்புப் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தப்பட்டது. இத்திருப்பலி தேசிய அளவிலும் ஒளிபரப்பப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.