2013-06-19 16:31:16

கற்றனைத்தூறும்...... கொழுப்பைக் குறைக்கும் சப்போட்டோ!


இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.
100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.
சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கும்.
இதயம் தொடர்பான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.
மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும்.
சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.
தோலை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : சித்தார்கோட்டை








All the contents on this site are copyrighted ©.