2013-06-17 16:55:22

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை


ஜூன்,17,2013. பல யூதர்களை நாத்சி அடக்குமுறைகளிலிருந்து காப்பாற்றி, வாழ்வின் நற்செய்திக்குச் சாட்சியாகத் திகழ்ந்த முத்திப்பேறு பெற்ற Odoardo Focheriniக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம் என்று கூறி இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனித வாழ்வைத் தனது உயிரினும் மேலாக மதித்த Odoardo Focherini, தனது உயிரைப் பணயம் வைத்து துன்புற்ற யூதர்களின் வாழ்வைக் காப்பாற்றினார் என்று கூறினார் திருத்தந்தை.
கடந்த சனிக்கிழமையன்று முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்ட Odoardo Focherini, Hersbruck, நாத்சி வதைப்போர் முகாமில் 1944ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தனது 37வது வயதில் இறையடி சேர்ந்தார்.
வாழ்வின் நற்செய்தியைக் கொண்டாடுவோம் என்றும் இம்முவேளை செப உரையின்போது கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வை ஊக்குவிப்பதில் நேரடியாகச் செயல்பட்டுவரும் குடும்பங்களுக்குத் தன் தனிப்பட்ட நன்றியையும் வெளியிட்டார்.
திருஅவையில் இஞ்ஞாயிறன்று Evangelium Vitae என்ற மனித வாழ்வு ஆதரவு தினம் சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : SEDOC








All the contents on this site are copyrighted ©.