2013-06-15 16:33:52

2030ல் உலகில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள நாடாக இந்தியா


ஜூன்,15,2013. ஒரு நாளைக்கு 75 ஆயிரம் குழந்தைகள் வீதம் பிறக்கும் இந்தியா, 2030ம் ஆண்டுக்குள் உலகில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நாடாக அமையக்கூடும் என்று ஐ.நா. கணித்துள்ளது.
தற்போது 120 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மக்கள் தொகை 2030ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையைவிட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், குடும்பக்கட்டுப்பாடு என்ற கொள்கைகளின்கீழ் இடம்பெறும் கருக்கலைப்புகள் குறித்து குறைகூறியுள்ள திருப்பீட வாழ்வுக் கழக உறுப்பினர் மருத்துவர் பாஸ்கால் கர்வாலோ, ஓராண்டில் இந்தியாவில் 62 இலட்சம் கருக்கலைப்புகள் இடம்பெறுவது குறித்து குறைகூறியுள்ளார்.

ஆதாரம் : Asianews








All the contents on this site are copyrighted ©.