2013-06-14 16:39:09

கர்தினால் Tauran, இலண்டன் இந்து சமயக் குழுவினர் சந்திப்பு


ஜூன்,14,2013. அமைதியை ஏற்படுத்துவதற்குப் பரிவிரக்கம் இன்றியமையாதது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, இலண்டன் இந்து சமய வல்லுனர்களிடம் கூறினார்.
பிரிட்டனில் இப்புதன் முதல் ஐந்து நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவரும் கர்தினால் Tauran, வட இலண்டனில் இந்து மத ஆலயம் ஒன்றில் பிரிட்டனின் இந்து சமயக் குழுவினரைச் சந்தித்தபோது பல்சமய உரையாடலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
பிற சமய மரபுகளைப் பாராட்டுவதற்கும், அனைத்து மக்களும் சுதந்திரத்திலும் அமைதியிலும் வாழ்வதற்கு நல்ல சூழல்களை உருவாக்குவதற்கும் பல்சமய உரையாடல் உதவுகின்றது என்றும் கூறினார் கர்தினால் Tauran.
நவீனகாலத் திருத்தூதராகிய மகாத்மா காந்தி அஹிம்சாவைச் செயல்படுத்தியபோது அவரில் பரிவிரக்கம் என்ற பண்பு வெளிப்பட்டது என்றும் கூறிய கர்தினால் Tauran, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பரிவிரக்கம் குறித்துப் பேசியிருப்பதையும் விளக்கினார்.
திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Tauran மேற்கொண்டுள்ள இச்சுற்றுப்பயணம் வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.