2013-06-13 17:13:35

Slovenia குடியரசின் பிரதமர் திருத்தந்தையுடன் சந்திப்பு


ஜூன்,13,2013. ஜூன் 13, இவ்வியாழன் காலை Slovenia குடியரசின் பிரதமர் Alenka Bratušek அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தார்.
Slovenia நாட்டு வரலாற்றில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றியுள்ள முக்கியப் பங்கு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சுமுகமான உறவு, இதன் விளைவாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையே இன்னும் உறைவை ஆழப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், ஆகியவை இச்சந்திப்பில் இடம்பெற்றதாக வத்திக்கான் தகவல் அலுவலகம் அறிவித்தது.
தற்போதையப் பொருளாதாரச் சரிவினால் நாடு சந்திக்கும் சவால்களையும், இந்நேரத்தில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றக்கூடிய பணிகள் ஆகியவை குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
திருத்தந்தையைச் சந்தித்தபின், பிரதமர் Bratušek அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே அவர்களையும், நாடுகளுடன் உறவை மேற்கொள்ளும் திருப்பீடத் துறையின் நேரடிச் செயலர் பேரருள் தந்தை Antoine Camilleri அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.