2013-06-11 17:13:57

வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் வியட்நாம் காரித்தாஸ் அமைப்பு


ஜூன்,11,2013. வியட்நாம் நாட்டில் கருக்கலைப்புகள் அதிகரித்து வருவதைத்தொடர்ந்து, வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் சிறப்புக் கவனம் செலுத்தி, செயல்பாடுகளை இருமடங்காக்கியுள்ளது அந்நாட்டு கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு.
ஒரே ஆண்டில் வியட்நாம் நாட்டில் 17 இலட்சம் கருக்கலைத்தல்கள் இடம்பெற்றுள்ளன என கவலையை வெளியிட்ட வியட்நாம் காரித்தாஸ் அமைப்பு, நலஆதரவுக் கல்வியையும், கருவில் வளரும் குழந்தைகளைப் பாதுக்காப்பதையும், உறுதிச்செய்யும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது.
ஒவ்வோர் ஆண்டும் வியட்நாமில் கருக்கலைத்தலை மேற்கொள்ளும் 17 இலட்சம் பெண்களுள் 3 இலட்சம் பேர் 19 வயதிற்குட்பட்டவர்கள் எனக்கூறும் வியட்நாம் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, உலகில் கருக்கலைத்தல்கள் அதிகமாக இடம்பெறும் 5 நாடுகளுள் வியட்நாமும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.