2013-06-11 17:17:01

பூர்வீகக் குடிமக்கள் கொலைச்செய்யப்படுவது குறித்து பிரேசில் திரு அவை கண்டனம்


ஜூன்,11,2013. பூர்வீகக் குடிமக்கள் கொலைச் செய்யப்படுவது பிரேசில் நாட்டில் அதிகரித்து வருவதாக அந்நாட்டு கத்தோலிக்க திரு அவை தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பெரும்பானமையான இக்கொலைகள், நில ஆக்ரமிப்பு தொடர்புடையதாக இருப்பதாகக் கூறும் தலத்திருஅவை, 2000க்கும் 2010க்கும் இடைப்பட்டக்காலத்தில் 452 பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளது குறித்த புள்ளிவிவரத்தையும் தெரிவித்துள்ளது.
பழங்குடிமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதைத் தடுக்கவும் பழங்குடிமக்களுக்குரியஇடங்களைப் பாதுகாக்கவும் அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை எனவும் பிரேசில் திருஅவை குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆதாரம் : MISNA








All the contents on this site are copyrighted ©.