2013-06-10 17:08:23

மியான்மாரில் குடிபெயர்ந்த மக்களிடையே ஐ.நா. வின் பணி


ஜூன்,10,2013. மியான்மாரின் Rakhine மாநிலத்தில் ஓராண்டிற்கு முன்னர் இடம்பெற்ற இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல்களால் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்த மக்களுள் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் இன்னும் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் வாழ்வதாக ஐ.நா. அமைப்பு அறிவித்தது.
தங்கள் சொந்த இடங்களை இழந்துள்ள மக்களைக் குறித்து பதிவுச்செய்யவும், அவர்கள் பாதுகாப்புடன் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல உறுதியை வழங்கும் நோக்கில் ஒப்புரவை ஏற்படுத்தவும் அரசுடன் இணைந்துப் பணியாற்ற உள்ளதாக அறிவித்தார் ஐ.நா. உயர் அதிகாரி.
கடந்த ஆண்டின் இஸ்லாமிய, புத்த மோதல்களால் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு, சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், நல ஆதரவுப்பணிகள் போன்றவைகளை வழங்குவதில் அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.