2013-06-10 16:57:35

இங்கிலாந்தின் இந்து, சீக்கிய மற்றும் சமண சமூகங்களைச் சந்திக்கச் செல்கிறார் கர்தினால் தவ்ரான்


ஜூன்,10,2013. இப்புதன் முதல் இங்கிலாந்தில் ஐந்து நாள் அதிகாரப்பூர்வபயணத்தை மேற்கொள்ளஉள்ள, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, இங்கிலாந்தில் வாழும் இந்து, சீக்கிய மற்றும் சமணத்தலைவர்களுடன் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள உள்ளார்.
13ம் தேதி வியாழனன்று இலண்டனின் Neasdenல் உள்ள இந்து கோவிலைப் பார்வையிடச் செல்லும் கர்தினால் தவ்ரான், 'கத்தோலிக்கர்களும் இந்துக்களும் : அமைதிக்கான பங்களிப்பாக கருணையின் செயற்பாடுகள்' என்ற தலைப்பில் இடம்பெறும் கருத்தரங்கில் கலந்து கொண்டபின், ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்யும் மதிய விருந்திலும் கலந்துகொள்வார்.
14ம் தேதி சமண மதத்லைவர்களுடன் இடம்பெறும் கருத்தரங்கிற்கு 'கத்தோலிக்கர்களும் சமணர்களும் : அமைதிக்கான பங்களிப்பாக அஹிம்சா வாழ்க்கை முறைகள்' என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் சீக்கிய மதத்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலங்துகொள்வார், மதங்களிடையேயான பேச்சுவர்த்தைகளுக்கான அவையின் தலைவர் கர்தினால் தவ்ரான்.

ஆதாரம் : SEDOC








All the contents on this site are copyrighted ©.