2013-06-03 17:46:45

ஜோர்டனில் முதல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்


ஜூன்,03,2013. உண்மைக்கான அன்பு, புரிந்துகொள்ளுதல், மதங்களிடையே பேச்சுவார்த்தைகள் போன்றவைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் பணியாற்றவுள்ள கத்தோலிக்கப்பல்கலைக்கழகம் ஒன்று ஜோர்டன் நாட்டில் திறக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் முதல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகமான இதன் அடிக்கல்லை திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 2009ம் ஆண்டில் ஆசீர்வதித்து நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள Madaba பல்கலைக்கழகத்தின் கீழ் அதே பெயருடன் இயங்கவுள்ள இப்பல்கலைக்கழகத்தின் திறப்புவிழாவில், எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவர் பேராயர் Fouad Twal, ஜோர்டன் மன்னர் இரண்டாம் Abdullah, கீழைவழிபாட்டுமுறைகளுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri ஆகியோருடன் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இத்திறப்புவிழாவில் உரையாற்றிய கர்தினால் Sandri, ஒவ்வொருவரும் மற்ற மதத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்வதுடன், வரலாற்றில் இடம்பெற்றுள்ள காயங்களை துணிவுடன் குணப்படுத்துவதிலும் உதவ வேண்டும் என அழைப்புவிடுத்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.