2013-06-01 16:55:18

நிக்கோபார் தீவுகள், உலகின் உயிரியல் உலகமென அறிவிப்பு


ஜூன்,01,2013. 1,800 வகையான விலங்கினங்களையும், உலகில் அழியக்கூடிய ஆபத்தை மிக அதிகமாக எதிர்கொள்ளும் பழங்குடி இனத்தவரையும் கொண்டிருக்கும் நிக்கோபார் தீவுகள், உலகின் உயிரியல் உலகமென யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர் மற்றும் உயிரியல் உலகத் திட்டத்தின்கீழ் இதனை அறிவித்துள்ளது யுனெஸ்கோ.
பாகிஸ்தானின் Ziarat Juniper காடுகள், சீனாவின் பாம்புத் தீவு உட்பட 117 நாடுகளில் இத்தகைய பல இடங்கள் ஐ.நா. நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் ஏழு இடங்கள் இந்தியாவில் உள்ளன.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.