2013-06-01 16:54:08

அரபு நாடுகளில் கத்தோலிக்கருக்கு வழிபாட்டுத் தலங்கள் தேவைப்படுகின்றன


ஜூன்,01,2013. அரபு நாடுகளில் வாழும் கத்தோலிக்கருக்கு வழிபாட்டுத் தலங்கள் தேவைப்படுகின்றன என்று, அந்நாடுகளுக்கான அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் Camillo Ballin கூறினார்.
சவுதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரெய்ன் ஆகிய மறைபோதகத் தளங்களுக்கான அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் Ballin, CNA செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், கத்தோலிக்கர் சேர்ந்து வழிபடுவதற்கு இடமும், அவர்கள் மீதான சகிப்புத்தன்மையும் தேவைப்படுகின்றன என்று கூறினார்.
இந்த அரபு நாடுகளிலுள்ள ஏறக்குறைய 25 இலட்சம் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சார்ந்தவர்கள் என்றும் ஆயர் Ballin தெரிவித்தார்.
கிறிஸ்தவர்களுக்கென்று குறிப்பிட்ட சட்டங்களைக் கேட்வில்லை, ஆனால் வழிபடுவதற்கு இடங்களை மட்டுமே கேட்கிறோம் எனவும் ஆயர் Ballin கூறினார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.