2013-05-31 16:10:17

திருத்தந்தை பிரான்சிஸ் : மீட்பு வரலாறு முழுவதும் நம்மைத்தேடும் கடவுளின் வரலாறு


மே,31,2013. மீட்பு வரலாறு முழுவதும் நம்மைத்தேடும் கடவுளின் வரலாறு; அவர் நமக்கு அன்பை வழங்குகிறார், கனிவோடு நம்மை வரவேற்கிறார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி, இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஏழைகளுக்கு உதவி செய்வதற்கு 5,305 மருத்துவமனைகள் மற்றும் 18,179 சிறிய மருத்துவமனைகளில் கத்தோலிக்கத் திருஅவை தூண்டுதலாக இருந்து வருகின்றது என்று திருப்பீடச் செயலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.