2013-05-31 16:15:36

கொலம்பிய அமைதி ஒப்பந்தத்துக்குத் தலத்திருஅவை ஆதரவு


மே,31,2013. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நிலச் சீர்திருத்தத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Rubén Salazar Gómez.
அரசுக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுள்ள இந்த ஒப்பந்தம் நன்றாக அமல்படுத்தப்படுவது, அந்நாட்டின் வேளாண்மை வளர்ச்சிக் கொள்கைக்கு இன்றியமையாததாக இருக்கின்றது என்றும் கர்தினால் Salazar Gómez கூறினார்.
மேலும், கொலம்பியாவின் ஒரு விழுக்காட்டு மக்கள், அந்நாட்டின் 52 விழுக்காட்டு நிலங்களைக் கொண்டிருக்கும்வேளை, அந்நாட்டில் உண்மையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நிலங்கள் சம்மாகப் பங்கிடப்படுவது முக்கியம் என ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.