2013-05-29 16:17:59

மே 30, 2013. . கற்றனைத்தூறும்...... எலுமிச்சை


குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சம் பழம்.
எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் செரிமான சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும்.
சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர்.
அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது.
எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும்.
நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம்
பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற இரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி
நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம்
பழத்தில் உள்ள மற்றொரு இரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது. மற்ற எந்தப் பழத்தையும்விட எலுமிச்சம் பழம்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.

ஆதாரம் : பாட்டி வைத்தியம்








All the contents on this site are copyrighted ©.