2013-05-29 16:51:15

இளைய தலைமுறையினரின் எண்ணங்களை சீராக்கும் கல்வி முறையில் மிகுந்த கவனம் தேவை - பாகிஸ்தான் ஆயர்கள்


மே,29,2013. இளையத் தலைமுறையினரின் எண்ணங்களை சீராக்கும் கல்வி முறையில் மிகுந்த கவனம் தேவை என்று பாகிஸ்தான் ஆயர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானில் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் Nawaz Sharif அவர்களிடம், பாகிஸ்தான் ஆயர்கள் பேரவையின் நீதி அமைதி பணிக்குழு சமர்பித்துள்ள ஒரு வேண்டுகோளில், அந்நாட்டின் பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பயன்படுத்தப்படும் பாட நூல்களில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, 22 நூல்களில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான, தவறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இத்தகையப் பாடங்களைப் பயிலும் இளையோர், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையில் இறங்குவதைத் தடுக்கமுடியாது என்று பாகிஸ்தான் நீதி அமைதி பணிக்குழுவின் தலைவர் பீட்டர் ஜேக்கப் Fides செய்தியிடம் கூறினார்.
இத்தகைய தவறான கருத்துக்களை பாட நூல்களிலிருந்து நீக்கும்படியாக பிரதமருக்கு விண்ணப்பம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அருள் பணியாளர் ஜேக்கப் கூறினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.