2013-05-28 16:08:55

கற்றனைத் தூறும் அக்கினி நட்சத்திரம்


சித்திரையின் இறுதி வாரமும், வைகாசியின் முதல் இரு வாரங்களும் இணைந்த மூன்று வாரங்களை அக்கினி நட்சத்திர நாட்கள் என்று அழைக்கிறோம். கடந்த பல ஆண்டுகள், அக்கினி நட்ச்சத்திரத்தின் தாக்கம் இந்த மூன்று வாரங்களையும் கடந்து 25 அல்லது 30 நாட்கள் நீடிப்பதையும் உணர்ந்து வருகிறோம்.
இவ்வாண்டு மே மாதம் 4ம் தேதி துவங்கியதாகச் சொல்லப்பட்ட அக்கினி நட்சத்திரம், மே 28, இச்செவ்வாயுடன் முடிந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால், வெயிலின் கடுமை குறைவதற்கு இன்னும் பல நாட்களாகும்போல் தெரிகிறது.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நாட்களை நாம் 'அக்கினி நட்சத்திரம்' என்று அழைப்பதுபோல், ஆங்கிலத்தில் 'Dog Days', அதாவது, 'நாய் நாட்கள்' என்று அழைக்கின்றனர். பூமியின் வட பாதிக் கோளத்தை (Northern Hemisphere) ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், தென் பாதிக் கோளத்தை (Southern Hemisphere) சனவரி, பிப்ரவரி மாதங்களிலும் 'Dog Days' தாக்கும்.
உரோமைய, மற்றும் கிரேக்கக் கலாச்சாரங்களில், Sirius என்றழைக்கப்படும் விண்மீன் தோன்றும் நாட்களை 'Dog Days' என்று அழைத்தனர். பூமிவாழ் மக்களின் கண்களுக்கு Sirius விண்மீன் தெரிய ஆரம்பித்தால், கூடவே பூமியின் வெப்பமும் கூடும் என்பது பொதுவான கணிப்பு. Sirius விண்மீனுக்கு Canis Major (Large Dog), அதாவது, 'பெரிய நாய்' என்ற பெயரும் உண்டு. எனவே, 'பெரிய நாய்' என்ற Sirius தோன்றும் வெப்பமான நாட்களை 'Dog Days' என்று அழைத்தனர்.

ஆதாரம் : Wikipedia








All the contents on this site are copyrighted ©.