2013-05-28 16:21:27

ஆப்ரிக்காவின் இயற்கை வளங்கள், அக்கண்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும், ஐ.நா. அறிக்கை


மே,28,2013. ஆப்ரிக்காவில் வேளாண்மை, சுரங்கத்தொழில் மற்றும் பிற இயற்கை வளங்களில் கவனம் செலுத்துவது, அக்கண்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது.
“ஆப்ரிக்காவின் பொருளாதாரம் குறித்த ஒரு கண்ணோட்டம் 2013” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆப்ரிக்கா தன்னிடமிருக்கின்ற இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2013 மற்றும் 2014ம் ஆண்டுகளுக்கான ஆப்ரிக்காவின் பொருளாதாரத் திட்டங்கள் நம்பிக்கை தருவதாய் இருப்பதாகத் தெரிவிக்கும் அவ்வறிக்கை, இவ்வாண்டில் 4.8 விழுக்காடும், அடுத்த ஆண்டில் 5.3 விழுக்காடும் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்றும் நிர்ணயித்துள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.