2013-05-27 17:22:37

திருத்தந்தை : தூய மூவொரு கடவுள் என்பது, கடவுள் தன்னையே வெளிப்படுத்திய முகம்


மே,27,2013. தூய மூவொரு கடவுள் என்பது மனிதனின் பகுத்தறிவு கொண்டு தேடப்பட்ட ஒன்றல்ல, மாறாக, கடவுள் தன்னையே வெளிப்படுத்திய முகம் அது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ 80,000 திருப்பயணிகளுக்கு ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட மூவொரு கடவுள் திருவிழாவையொட்டி தன் உரையைத்தொடர்ந்தார்.
அன்பின் வடிவில் இறைவன் தன்னை வெளிப்படுத்தியுள்ள முகம் நம் அன்பைப்போல் உணர்வுப்பூர்வமானதல்ல, மாறாக, அனைத்து உயிர்களின் ஆதாரமாக இருக்கும் இறைத்தந்தையின் அன்பு, சிலுவையில் இறந்து உயிர்த்த இறைமகனின் அன்பு மற்றும் மனிதனையும் உலகையும் புதுப்பிக்கும் தூய ஆவியாரின் அன்பு என்றார் திருத்தந்தை.
வரலாற்றில் மனிதகுலத்தோடு இணைந்ததன் வழி இறைவன் தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இஸ்ரயேல் மக்களோடும், நாசரேத்தூர் இயேசுவிலும் இறைவன் நடந்ததை சுட்டிக்காட்டினார்.
கடவுள் புரிந்துகொள்ளமுடியாதவர் அல்ல, அவருக்கென்று ஒரு பெயர் உள்ளது, அதுவே அன்பு என மேலும் உரைத்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.