2013-05-27 17:29:35

. பங்களாதேசில் கத்தோலிக்கக் கோவில் ஒன்றை கட்ட இந்துக்களும் இஸ்லாமியர்களும் உதவி


மே,27,2013. பங்களாதேசின் தலைநகருக்கு அருகேயுள்ள Mathbari என்ற இடத்தில், கத்தோலிக்க கோவில் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான நிதி திரட்டலில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களோடு இன்ணைந்து உழைப்பதாகத் தெரிவித்தார் அக்கோவில் பங்கு குரு.
கத்தோலிக்கக் கோவிலைக் கட்டியெழுப்ப மூன்று இலட்சத்து எண்பதாயிரம் டாலர்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டிருக்க, அதில் 7,693 டாலர்களை இந்து மற்றும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் வழங்கியுள்ளதாக தெரிவித்தார் பங்கு குரு Boniface Subrata Tolentino.
1925ம் ஆண்டு Mathbariயில் கட்டப்பட்ட சிறியக்கோவில், தற்போது அங்கு வாழும் ஏறத்தாழ 3,500 கத்தோலிக்கர்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதால், அக்கோவில் பங்கு குரு கட்டிவரும் புதிய கோவிலுக்கு, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிதி உதவிகளை வழங்கிவருகின்றனர்.
இஸ்லாமியர்களைப் பெரும்பானமையாகக் கொண்ட பங்களாதேசில், மொத்த மக்கள் தொகையில் 0.4 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.