2013-05-25 16:57:08

கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்குப் புதிய எதிர்காலம், பெங்களூரு பேராயர் நம்பிக்கை


மே,25,2013. இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மனித உரிமைகள் மதிக்கப்பட்டு, உரையாடல், நீதி, நல்லிணக்கம் ஆகியவற்றை கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் ஒரு வித்தியாசமான எதிர்காலம் அமையக்கூடும் என்று பெங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் BJP கட்சி 223 இடங்களுக்கு 40 இடங்களை மட்டுமே பெற்றுள்ளவேளை, காங்கிரஸ் கட்சி 121 இடங்களைப் பெற்றுள்ளது குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் மொராஸ், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசின் தலைவர் Siddaramaiahவை நேரிடையாகச் சந்தித்து கிறிஸ்தவர்கள் சார்பில் தான் நம்பிக்கை தெரிவித்ததாகக் கூறினார்.
அரசு நிர்வாகம், பொதுவாழ்வு மற்றும் பொது நிறுவனங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார் பெங்களூரு பேராயர் மொராஸ்.
மேலும், கர்நாடகாவின் புதிய அரசு குறித்துப் பேசிய, இந்திய தேசிய பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் இயக்குனர் அருள்பணி ஃபாஸ்டின் லோபோ, புதிய சமூக மற்றும் சமயச் சூழலை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இன்று அதிகம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.