2013-05-23 16:47:30

அயோடின் குறைபாடு மன வளர்ச்சியைப் பாதிக்கும் - ஆய்வு முடிவுகள்


மே,23,2013. கர்ப்பகாலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப்போகும் குழந்தையின் மன வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் தொடர்புடைய உணவுகளைப் போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத்திறன், வாசிப்புத்திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருந்ததாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்பப் பள்ளி சிறார்களிடையே நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவுகள் தெரிய வந்ததாகவும் இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அயோடின் சத்து மிக அதிக அளவில் உள்ள கடற்பாசி சார்ந்த உணவுகளைக் கர்ப்பிணிகள் உட்கொள்ளும்போது, தேவையான அளவுக்கு கூடுதலாக அது உடலில் சேரும் போது அதுவும் நல்லதல்ல என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் தவிர்க்கப்படக்கூடிய மூளைப் பாதிப்புக்கள் ஏற்படுவதற்குக் கடுமையான அயோடின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று கருதப்படுகிறது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.