2013-05-21 15:35:10

இலங்கையில் கடந்த நான்காண்டுகளில் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் குறைந்துள்ளன


மே,21,2013. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளவேளை, அந்நாட்டில் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் மதிக்கப்படுவது குறைந்துள்ளது என்று ஓர் அனைத்துலக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
போர்க்காலக் குற்றங்களை விசாரணை செய்வதாக இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கு அளித்த வாக்குறுதிகள் இன்னும் பின்பற்றப்படாமலே இருக்கின்றன என்று Human Rights Watch என்ற மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள பல இலங்கை மக்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர், ஆனால் அதற்கு மாறாக, இலங்கை அரசு புலன்விசாரணைகளைப் புறக்கணித்துள்ளது, ஊடகத்துறையினர்மீது கடுமையாக நடந்து கொள்கிறது, சித்ரவதை போன்ற போர்க்கால மீறல்களைத் தொடர்ந்து செய்கின்றது என்று, அம்மனித உரிமைகள் குழுவின் ஆசிய இயக்குனர் Brad Adams குறை கூறியுள்ளார்.
மேலும், இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் கடைசி மாதங்களில் ஏறக்குறைய 40 ஆயிரம் அப்பாவி மக்களை இராணுவம் கொலை செய்திருக்கக்கூடும் என ஐ.நா. விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : AP







All the contents on this site are copyrighted ©.