2013-05-17 16:45:32

இலங்கை இராணுவம் : மீள்குடியேற்றத்துக்கு உதவியாக கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது


மே,17,2013. இலங்கையில் சண்டை இடம்பெற்ற பகுதிகளில், மக்கள் மீண்டும் குடியேறுவதற்கும் வேளாண்மை செய்வதற்கும் தேவைப்படும் அனைத்து இடங்களிலிருந்தும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் Ruwan Wanigasooriya கூறியுள்ளார்.
வெடிக்கப்படாமல் இருந்த ஏறக்குறைய 10 இலட்சம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இவ்வியாழனன்று தெரிவித்த Wanigasooriya, நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்பட்ட 2,064 சதுர கி.மீ. பரப்பளவில் 95 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பகுதியில் இவை அகற்றப்பட்டுள்ளன என அறிவித்தார்.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஒரு படைவீரர் இறந்துள்ளார் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்று இலங்கை இராணுவம் கூறியுள்ளது.
இலங்கையில், இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, 1972ம் ஆண்டில் தொடங்கிய சண்டையில் ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் இறந்துள்ளனர் என ஐ.நா. கூறுகிறது.

ஆதாரம் : AFP







All the contents on this site are copyrighted ©.