2013-05-16 16:31:14

கற்றனைத்தூறும்... அறிவு வளர


முத்ராக்கள் என்பது, கைகள், முகம், உடல் ஆகியற்றை அசைப்பதாகும். கை விரல்களை பல்வேறு முத்ராக்களில் வைப்பதன்மூலம் அவை உடலில் புதுமைகளைச் செய்கின்றன. முத்ராக்கள் உடலிலுள்ள உயிர்மூச்சுக்காற்றைச் செயல்பட வைத்து உடலின் பல்வேறு பகுதிகளில் பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
Gyan முத்ரா அல்லது அறிவு முத்ரா என்பது கட்டைவிரலின் நுனியை ஆள்காட்டி விரலின் நுனியால் தொடுவதாகும். இந்த முத்ராவைச் செய்யும்போது மற்ற மூன்று விரல்களும் நேராக நீட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த முத்ராவைச் செய்வதற்கு குறிப்பிட்ட நேரமோ இடமோ, குறிப்பிட்ட நிலையோ அல்லது குறிப்பிட்ட கால அளவோ தேவையில்லை. உட்கார்ந்து கொண்டு அல்லது படுத்துக்கொண்டுகூடச் செய்யலாம். இது அறிவு முத்ரா என்பதால் இதன்மூலம் அறிவு வளர்கிறது. கட்டைவிரலின் நுனியில் pituitary மற்றும் endocine சுரப்பிகளின் மையம் உள்ளது. கட்டைவிரல் நுனியை அமுக்கும்போது இவ்விரு சுரப்பிகளும் நன்றாக வேலை செய்கின்றன. இதனைச் செய்வதால் நினைவுசக்தி அதிகரித்து அறிவு கூர்மையாகிறது. கவனமும் அதிகரிக்கின்றது. இம்முத்ரா தூக்கமின்மையையும் தடுக்கிறது. இதனைத் தவறாது செய்து வந்தால், கோபம், மனச்சோர்வு, மனப்பிரம்மை, மனநலம் பாதிப்பு போன்ற உளவியல் சார்ந்த பிரச்சனைகளும் குணமாகும் என்று முத்ராக்களில் தேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.







All the contents on this site are copyrighted ©.