2013-05-16 16:48:19

Constantinople Ecumenical முதுபெரும் தலைவரின் மிலான் நகர பயண நிகழ்வுகள்


மே,16,2013. Constantinople Ecumenical முதுபெரும் தலைவர் முதலாம் Bartholomew அவர்கள் இப்புதன் மற்றும் வியாழன் ஆகிய இருநாட்கள் இத்தாலியின் மிலான் நகரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை வெளிப்படையாக, அச்சமின்றி தொடரலாம் என்று பேரரசர் Constantine, 313ம் ஆண்டு வெளியிட்ட 'மிலான் அறிக்கை' என்ற வரலாற்று நிகழ்வின் 17ம் நூற்றாண்டையொட்டி முதுபெரும் தலைவரின் பயணம் அமைந்துள்ளது.
இப்புதன் காலை 11 மணியளவில் முதுபெரும் தலைவர் முதலாம் Bartholomew அவர்களும், மிலான் கர்தினால் Angelo Scola அவர்களும் Podone என்ற இடத்தில் அமைந்துள்ள புனித மரியா கோவிலில் நடைபெற்ற ஆர்த்தடாக்ஸ் செப வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
இப்புதன் மாலை மிலான் நகரின் Caryatids என்ற இடத்தில் உள்ள அரச மாளிகையில் முதுபெரும் தலைவரும், கர்தினால் Scola அவர்களும் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இவ்வியாழன் காலையில் இவ்விரு தலைவர்களும் புனித அம்புரோஸ் பசிலிக்காவில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் கலந்து கொண்டனர். இவ்வழிபாட்டிற்குப் பின்னர், முதுபெரும் தலைவர் முதலாம் Bartholomew, பசிலிக்காவின் அடித்தளத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் புனித அம்புரோஸ் அவர்களின் உடலை பார்வையிட்டு வணக்கம் செலுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.