2013-05-06 17:01:00

மொரோக்கோவில் மதம் மாறுபவர்கள் கொல்லப்படும் அச்சம்


மே,06,2013. இஸ்லாம் மதத்தை விட்டு வேறு மதத்திற்குச் செல்பவர்கள் கொலைசெய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, மொரோக்கோ நாட்டு கிறிஸ்தவர்களிடையே அச்சம் நிலவிவருவதாக அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறிய பலர் அச்சத்திலேயே வாழ்வதாகவும், காவல்துறையினர் தங்களைப் பின்தொடர்வதை அவர்கள் தற்போது பெரிய அளவில் உணர்வதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிலிருந்து வேறு மதத்திற்குச் செல்பவர்கள் கொல்லப்படவேண்டும் என இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்கள் தங்களுக்குள்ளேயே சட்டம் இயற்றியிருப்பது, நாட்டில் சனநாயகமும் சுதந்திரமும் இல்லை என்பதையே காண்பிக்கிறது என உரைக்கும் மொரோக்கோ கிறிஸ்தவர்கள், எந்நேரமும் கொல்லப்படலாம் என்ற அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் ANS








All the contents on this site are copyrighted ©.