2013-05-06 16:59:46

திருத்தந்தையின் அல்லேலுயா வாழ்த்தோலி உரை


மே,06,2013. ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றி இஞ்ஞாயிறன்று கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பித்த கீழைரீதி கிறிஸ்தவ சபைகளுக்கு தன் இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது தனிப்பட்ட வாழ்த்துக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்ற நற்செய்தியை அனைத்துக் கிறிஸ்தவ சபைகளோடும் என் முழு இதயத்தோடு இணைந்து அறிவிப்பதோடு, அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் என தெரிவித்தார் பாப்பிறை.
அன்னைமரி மீதான பக்தி முயற்சிகள் குறித்தும் தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது குறிப்பிட்ட திருத்தந்தை, அன்னைமரி மீது நாம் கொண்டிருக்கும் அன்பு உயர்வானதாக மதிக்கப்பட்டு நன்முறையில் ஒருமுகப்படுத்தப்படவேண்டும் என்று கூறினார்.
அன்னை மரி குறித்து வத்திக்கான் சங்க ஏட்டின் ‘லூமன் ஜென்சியும்’ பகுதியில் கூறப்பட்டிருப்பவைகள் குறித்து ஆழ்ந்து தியானிக்குமாறும் அழைப்பு விடுத்தார் பாப்பிறை. இந்த நம்பிக்கை ஆண்டில், இயேசுவைப் பின்தொடர்வதில் நம் அனைவருக்கும் முன்னோடியாகச் செல்கிறார் அன்னை மரி எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.