2013-05-06 17:00:52

கொலையுடன் தொடர்பற்ற 7 கிறிஸ்தவர்கள் நான்கரை ஆண்டுகளாக சிறையில்


மே,06,2013. ஒரிசாவில் இந்து மத தலைவர் லக்ஷ்மானந்தா 2008ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டதற்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள போதிலும், இக்கொலை தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட ஏழு கிறிஸ்தவர்களும் விடுதலை செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்படுவது குறித்து இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் கவலையை வெளியிட்டிடுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் இந்த 7 கிறிஸ்தவர்கள் மீதான விசாரணைகள் மீண்டும் ஒருமுறை இம்மாதம் 22ம் தேதிக்கென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு நாட்களும் விரைவு நீதிமன்றம் எனப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கு தற்போது வழக்கமான நீதிமன்றத்தின் கைகளில் வழங்கப்பட்டுள்ளது, காலதாமதத்திற்கே வழிவகுக்கும் எனவும் கிறிஸ்தவத்தலைவர்கள் தங்கள் கவலையை மேலும் வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் Asia News








All the contents on this site are copyrighted ©.