2013-05-03 16:40:19

2012, அதிகமான வெப்ப ஆண்டுகளில் ஒன்று


மே,03,2013. 1850ம் ஆண்டுக்குப் பின்னர், 2012ம் ஆண்டு அதிகமான வெப்பம் மிகுந்த ஆண்டாக இருந்ததாக WMO என்ற உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது.
தொழிற்சாலைகள் வெளியேற்றுகின்ற கரியமிலவாயு, புவியைத் தொடர்ச்சியாக வெப்பமூட்டுகின்றது என்பதற்கு இது மற்றுமோர் அடையாளம் என்று ஐ.நா. அமைப்பான WMOன் பொது இயக்குனர் Michel Jarraud கூறியுள்ளார்.
வழக்கமாக குளிர்ச்சியான காலநிலையைத் தரும் பசிபிக் காலநிலைத் தன்மையான La Niña தன்மையின் மத்தியிலும் 2012ம் ஆண்டு மிகவும் வெப்பமாக இருந்ததாகவும் Jarraud கூறியுள்ளார்.
வறட்சி, வெள்ளம், சூறாவளிகள் போன்ற தாக்கங்களுடன், துருவப் பகுதியில் கோடைகாலத்தில் கடலில் பனி உருகுவதும் காலநிலை மாற்றத்தை காண்பிக்கும் கவலையளிக்கும் மற்றுமோர் அடையாளம் என்றும் அவ்வமைப்பு கூறுகிறது.
சராசரி வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் 27வது ஆண்டாகவும் 2012ம் ஆண்டு இருக்கின்றது எனக் கூறும் உலக வானிலை அமைப்பு, 1850ம் ஆண்டு முதல் காலநிலை குறித்த பதிவுகளைப் பதிவு செய்து வருகிறது.

ஆதாரம் : Zeenews








All the contents on this site are copyrighted ©.