2013-05-02 16:10:04

திருத்தந்தையும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரும் சந்திப்பது, கிறிஸ்துவ ஒருமைப்பாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்


மே,02,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்களுக்கும் இடையே இம்மாதம் 11ம் தேதி நடைபெறவிருக்கும் சந்திப்பு, கிறிஸ்துவ ஒருமைப்பாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எகிப்தின் காப்டிக் கத்தோலிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
மனுவான வார்த்தையாம் கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கத்தோலிக்கத் திருஅவையும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையும் பல்வேறு கருத்துக்களில் இணைந்து வந்தாலும், இன்னும் முழுமையான ஒருமைப்பாடு உருவாக வேண்டியுள்ளது என்று, Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் சுட்டிக்காட்டினார் எகிப்தின் மின்யா பகுதியின் ஆயர் Botros Fahim Awad Hanna.
40 ஆண்டுகளுக்கு முன்னர், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவராக இருந்த மூன்றாம் Shenouda அவர்கள், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களை வத்திக்கானில் சந்தித்த வரலாற்று நிகழ்வுக்குப் பின், இவ்வாண்டு மே மாதம் 11ம் தேதி மீண்டும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நிகழவிருப்பதாக Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.