2013-05-02 16:11:48

இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றும் - ஐ.நா. உயர் அதிகாரி


மே,02,2013. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு ஓர் அரசு செலவிடும் தொகை, பேரிடர்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்ற செலவிடும் தொகையை விட குறைவாகவே இருக்கும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இயற்கைப் பேரிடர்களும் பொருளாதார நெருக்கடியும் என்ற தலைப்பில் இப்புதனன்று பாங்காக் நகரில் நடைபெற்ற ஓர் ஐ.நா. கருத்தரங்கில் ஆசியா பசிபிக் பகுதியின் ஐ.நா. பொருளாதார ஆலோசகர் Noeleen Heyzer இவ்வாறு கூறினார்.
கட்டப்படும் கட்டிடங்களில் குறைபாடுகள் எழாமல் காப்பது, வலுவிழந்த கட்டிடங்களை மறு பரிசிலீனை செய்து அவற்றை உறுதி செய்ய அல்லது இடித்து விட முயற்சிகள் எடுப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றும் என்று திருவாளர் Heyzer எடுத்துரைத்தார்.
2004ம் ஆண்டு ஆசிய நாடுகளைத் தாக்கிய சுனாமி, 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2010ம் ஆண்டு அதே நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவை இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.