2013-05-01 16:05:12

புகை பிடிப்பவர்கள் மத்தியில், ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு புற்றுநோய் உண்டாகும் ஆபத்து அதிகம்


மே,01,2013. புகை பிடிப்பவர்கள் மத்தியில், ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு புற்றுநோய் உண்டாகும் ஆபத்து அதிகம் உள்ளதென்று, நார்வே நாட்டு அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
நோயுற்றோர் 600000 பேரின் மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, 9 விழுக்காடு ஆண்களுக்கும், 19 விழுக்காடு பெண்களுக்கும் புற்றுநோய் உருவாகும் ஆபத்து உள்ளதென்று கணிக்கப்பட்டுள்ளது.
Cancer Epidemiology என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், 16 அல்லது அதற்கும் குறைந்த வயதிலிருந்து புகைபிடிக்கும் பெண்களுக்கு புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகம் உள்ளதென்று தெரிகிறது.
ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இளையோர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து, உடலியல் ரீதியாக, பெண்கள் புகையிலையின் தாக்கங்களுக்கு எளிதில் பலியாகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.