2013-05-01 15:58:55

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முக உருவம் பதிந்த நான்கு தபால் தலைகள் வெளியீடு


மே,01,2013. கத்தோலிக்கத் திருஅவையின் புதியத் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பணியேற்றதையொட்டி வத்திக்கான் நகர அரசும், அர்ஜென்டீனா நாடும் இணைந்து புதிய தபால் தலைகளை வெளியிட்டுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முக உருவம் பதிந்த நான்கு தபால் தலைகளின் சிறப்புப் பதிவு ஒன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இச்செவ்வாய் பிற்பகல் அளிக்கப்பட்டது.
நான்கு வெவ்வேறு விலை மதிப்புள்ள 2,50,000 தபால் தலைகள் இந்த வரிசையில் வெளியிடப்பட்டுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் பதிந்த தபால் தலைகள், நாணயங்கள், அடங்கிய ஒரு வெளியீடு விரைவில் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.