2013-04-30 16:17:20

விமர்சகர்கள்மீது இலங்கை அரசு கடுமையாக நடந்து கொள்கிறது : Amnesty Int.


ஏப்.30,2013. விமர்சிப்பவர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் துன்புறுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதாக Amnesty International என்ற அனைத்துலக மனித உரிமை கழகம் இலங்கை அரசை குறைகூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் அரசுக்கு எதிராக கருத்துச் சொன்ன காரணத்துக்காக ஊடகவியலாளர்கள், நீதித்துறையினர், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போன்றோர் கடுமையாய்த் தாக்கப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும், சிலவேளைகளில் கொல்லப்பட்டும் இருக்கின்றனர் என்று Amnesty Int. தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் மேம்படாதவரையில் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு அந்நாட்டில் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என அக்கழகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் 2006ம் ஆண்டுமுதல் குறைந்தது 15 ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும் Amnesty Int.ன் அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, இலங்கை அரசு இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : AP







All the contents on this site are copyrighted ©.