2013-04-30 15:33:46

கற்றனைத் தூறும் மே தினம்... Mayday


மே மாதம் முதல் நாள் என்றதும் நினைவில் தோன்றுவது மே தினம் என்று வழங்கப்படும் அகில உலகத் தொழிலாளர் நாள்.
18ம் நூற்றாண்டின் இறுதியில் தொழில் புரட்சி தோன்றியது; பல இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், மனிதர்கள் செய்யும் தொழில் குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தொழிலதிபர்களின் பேராசையால் மனிதர்களும் இயந்திரங்களாய் மாற வேண்டிய கட்டாயம் உருவானது. இயந்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தவும், அவற்றைப் பராமரிக்கவும் தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் 15 அல்லது 16 மணி நேரம் உழைக்க வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு தொழிலாளியும் நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல நாடுகளில் போராட்டங்கள் எழுந்தன. அவற்றில் கிடைத்த வெற்றி, தோல்வி, உயிர் தியாகம் ஆகிய அனைத்தையும் கொண்டாட மே தினம் உருவானது.
Mayday என்ற வார்த்தை ஆபத்து நேரத்தில் அடுத்தவர் உதவியைத் தேடும் ஓர் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, கடல் பயணத்தின்போது, ஒரு கப்பலுக்கு ஆபத்து உருவானால், அருகிலுள்ள மற்ற கப்பல்களுக்கு 'Mayday…Mayday' என்ற செய்தி அனுப்பப்படும். இந்த வார்த்தை, பிரெஞ்ச் மொழியில் பயன்படுத்தப்படும் 'M'aider' என்ற சொல்லிலிருந்து உருவானது. 'M'aider' என்றால் 'help me' அதாவது, 'எனக்கு உதவி செய்யுங்கள்' என்று பொருள்.

ஆதாரம் : Wikipedia








All the contents on this site are copyrighted ©.